புதுடெல்லி: நாடு முழுவதும் எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு முடிவு அடிப்படையில் மாணவர் சோ்க்கை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 4ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று முதல் தொடங்கியது.
ஆன்லைன் மூலம் மார்ச் 7 வரை விண்ணப்பிக்கலாம். ஏப்.26ல் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். மே 1ம் தேதி ஹால்டிக்கெட் வெளியிடப்படும். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு 3 மணி நேரம் நடக்கும். ஜூன் 14ல் ரிசல்ட் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மார்ச் 7 வரை விண்ணப்பம் மே 4ல் நீட் தேர்வு appeared first on Dinakaran.