மாஜி எம்பி, மாஜி எம்எல்ஏ உட்பட காங்கிரசில் சேர்ந்த மாஜி முதல்வரின் உறவினர்கள்: மகாராஷ்டிரா பாஜகவுக்கு பின்னடைவு

2 hours ago 4

மும்பை: முன்னாள் முதல்வரின் உறவினர்களான மாஜி எம்பி, மாஜி எம்எல்ஏ உட்பட சிலர் காங்கிரசில் சேர்ந்ததால், மகாராஷ்டிரா பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் லோக்சபா தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்த் சவான் மறைவால், அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தலுடன், நாந்தேட் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

அதற்கு முன்னதாக சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் முதல்வர் அசோக் சவானின் மைத்துனரும், முன்னாள் எம்பியுமான பாஸ்கரராவ் பாட்டீல் கட்கோங்கர், அவரது சகோதரி டாக்டர் மினல் பாட்டீல் கட்கோங்கர், முன்னாள் எம்எல்ஏ ஓம் பிரகாஷ் போகர்னா ஆகியோர் பாஜகவில் இருந்து காங்கிரசில் இணைந்துள்ளனர். இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டேல் கூறுகையில், ‘எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டு பாஸ்கரராவ் காங்கிரசில் இணையவில்ைல. பாஸ்கர் ராவ் காங்கிரசில் இணைந்ததால், நாந்தேட் தொகுதியில் காங்கிரஸ் வலுபெறும்’ என்றார்.

இதுகுறித்து பாஸ்கரராவ் பாட்டீல் கட்கோங்கர் கூறுகையில், ‘காங்கிரசில் இணைந்த பிறகு தான், சொந்த வீட்டுக்கு திரும்பியதாக உணர்கிறேன். காங்கிரஸ் கட்சி தான் எனக்கு எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சராகப் பணியாற்ற வாய்ப்பளித்தது. சில காலம் வேறு கட்சியில் இருந்துவிட்டு மீண்டும் திரும்பியிருக்கிறேன். மகாராஷ்டிராவில் நானா படேல் தலைமையில் கட்சி வலுப்பெற்றுள்ளது. இந்த முறை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு முன்பை விட அதிக இடங்கள் கிடைக்கும்’ என்றார்.

The post மாஜி எம்பி, மாஜி எம்எல்ஏ உட்பட காங்கிரசில் சேர்ந்த மாஜி முதல்வரின் உறவினர்கள்: மகாராஷ்டிரா பாஜகவுக்கு பின்னடைவு appeared first on Dinakaran.

Read Entire Article