கோலாலம்பூர்: பிரபல மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். மலேசியாவில் 5.1பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மலேசியாவின் 6 முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர். தமிழரான இவர் தொலை தொடர்பு, ஊடகம், பெட்ரோலியம் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பரந்த வணிக சாம்ராஜ்யத்தை கொண்டவர். மலேசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஆனந்த கிருஷ்ணன் தனது 86வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
அவரது மறைவை அவரது முதலீட்டு நிறுவனமான உசாஹா டெகாஸ் அறிவித்துள்ளது. நாட்டை கட்டியெழுப்புவதற்கும், கார்ப்பரேட் உலகிற்கும் ஆனந்த கிருஷ்ணன் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். இவர் 1980 மற்றும் 1990ம் ஆண்டு காலகட்டங்களில் தனது செல்வத்தின் பெரும்பகுதியை சம்பாதித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவரது மகன் ஒரு புத்த துறவி. இவரது இரண்டு மகள்களும் இவரது தொழில்களில் ஈடுபடவில்லை.
The post மலேசியாவின் பிரபல தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் மறைவு appeared first on Dinakaran.