மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சர்பிரைஸ் கொடுத்த நடிகர் ஜானி டெப்

1 month ago 6

ஸ்பெயின்,

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானிடெப். இவர் 2003-ல் வெளியான 'தி பைரேட் ஆப் தி கரீபியன்' படத்தில் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றார். இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றன. 1997-ல் அவர் இயக்கிய "தி பிரேவ்" திரைப்படம் குறிப்பிடத்தக்கது. "மோடி- திரி டேஸ் ஆன் தி விங் ஆப் மேட்னஸ்" படத்தையும் இயக்கி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். கலை உலகில் சாதித்தவற்றுக்காகவே இத்தாலியில் ரோம் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருதினை பெற்றுள்ளார்.

ஜானி டெப் தற்போது 'டே ட்ரிங்கர்' என்ற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். ஸ்பெயினில் இப்படத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே அங்குள்ள ஒரு மருத்துவமனையில் ஜாக் ஸ்பேரோ உடையில் ஜானி டெப் சென்றுள்ளார்.

மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பேசி ஜானி டெப் விளையாடியுள்ளார். இதனால் குழந்தைகள் மகிழ்ச்சியில் திளைத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

El capitán Jack Sparrow ha visitado el Hospital Infantil Niño Jesús pic.twitter.com/D1TzPepmdm

— Salud Madrid (@SaludMadrid) June 18, 2025
Read Entire Article