மரபணு குறைபாடுடைய அரிதான வெள்ளை நாகம் கோவையில் பிடிபட்டது

2 hours ago 4

கோவை: கோவையில் நீர் தொட்டிக்கடியில் பதுங்கியிருந்த மரபணு குறைபாடுடைய அரிதான வெள்ளை நாகம் கோவையில் பிடிபட்டது. நீர் தொட்டிக்கடியில் பதுங்கியிருந்த வெள்ளை நாக பாம்பு பத்திரமாக பாம்பு பிடி வீரர் மோகன் என்பவரால் மீட்கப்பட்டது.

கோவை போத்தனூர் பகுதியில் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக, வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரர் மோகன் என்பவருக்கு தகவல் தரப்பட்டன. இந்த நிலையிலே, பாம்பை பிடிக்க சென்ற பாம்பு பிடி வீரர் மோகன், பாம்பை பத்திரமாகமீட்டார்.

மீட்கப்பட்ட பின்னர் அந்த பாம்பு மரபணு குறைபாடு உடைய அறிய வகை வெள்ளை நாகம் என்பது தெரிய வந்தன . கொடிய விஷம் உடைய இந்த வெள்ளை நாகப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு பாட்டில் அடைக்கப்பட்டன. இந்த பாம்பு வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அதன் வாழ்விடத்தில் விடப்படும்.

நாகப்பாம்பு உட்பட எந்த பாம்பையும் பொதுமக்கள் பார்க்கும் பொழுது, அதனை அடிக்கவோ பிடிக்கவோ முற்படக்கூடாது என தெரிவித்த வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரர் மோகன், பாம்பு பிடிப்பதற்கான கைதேர்ந்த பாம்பு பிடி வீரர்கள் மற்றும் வனத்துறைக்கு இது குறித்து தகவல் தர வேண்டும் எனவும், அவ்வாறு தகவல் தரும் பட்சத்தில் பாம்பு பத்திரமாக மீட்கபட்டு,அதன் வாழ்விடத்தில் விடப்படும் எனும் தெரிவித்திருக்கின்றார்.

பொதுமக்களிடம் இருந்து பாம்புகளையும், பாம்புகளிடமிருந்து இருந்து பொதுமக்களையும் பத்திரமாக பாதுகாக்க வனத்துறை, பாம்பு பிடி வீரர்கள், உயிரியல் தன்னார்வ அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

The post மரபணு குறைபாடுடைய அரிதான வெள்ளை நாகம் கோவையில் பிடிபட்டது appeared first on Dinakaran.

Read Entire Article