மத்திய அரசின் கல்வி நிதிக்காக கொள்கையை விட்டுத்தர முடியாது: அமைச்சர் அன்பில் மகேஸ் திட்டவட்டம்

1 week ago 9

திண்டுக்கல்: “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலங்களுக்கான கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொள்கையை விட்டுக் கொடுத்துவிட்டு கல்வி நிதியை பெற வேண்டிய அவசியம் இல்லை” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ளார். முதல்வரின் முயற்சியால் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள சிப்காட்டில் ஜாபில் எனும் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் பெண்கள் உட்பட 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். இதன் மூலம் திருச்சி மட்டுமின்றி திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூரை சேர்ந்தவர்களும் பயனடைவர்.

Read Entire Article