மணிப்பூரில் கூடுதலாக 16 அத்தியாவசிய பொருள் விநியோக மையங்கள் திறக்கப்படும் - அமித் ஷா

2 days ago 3
இனக்குழுக்களுக்கு இடையேயான மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில், மக்களுக்காக நியாய விலையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க கூடுதலாக 16 பொருள் விநியோக மையங்கள் திறக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். ஏற்கெனவே 21 பொருள் விநியோக மையங்கள் உள்ள நிலையில், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் வலைத்தள பதிவில் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை மக்கள் வாங்கிக்கொள்ள வசதியாக, சில மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் இன்று ஒரு நாள் மட்டும் மாலை 6 மணி வரை விலக்கிக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பாக குகீ மற்றும் மைதேயி இன மக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
Read Entire Article