
திருவண்ணாமலை,
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தடம் பதித்தவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இன்றைய தலைமுறை திரை இசை ரசிகர்களிடையே செல்வாக்கையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளார். குத்து பாடல்கள் முதல் காதல் பாடல்கள் வரை 2கே கிட்ஸ் ரசிகர்களின் இசை நாயகனாக வலம் வருகிறார். லைகா நிறுவனம் தயாரிப்பில் இவரது இசையில் வெளியான 'விடாமுயற்சி' படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து "கூலி, ஜன நாயகன், மதராஸி' ஆகிய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், சிவ பக்தரான இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். சிவராத்திரி என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனாலும் பொறுமையாக வரிசையில் நின்று, வழிபாடு செய்தார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.