மகா விஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி

1 week ago 9

சென்னை,

பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு கடந்த வாரம் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மத்தியில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். அவருடைய பேச்சு சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள், புகார்கள் வந்த நிலையில் சைதாப்பேட்டை போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், மகா விஷ்ணுவின் பின்னணி குறித்து விசாரிக்க அவரை 7 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து மகா விஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

#BREAKING || மகாவிஷ்ணுவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்நாட்கள் காவல் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில், 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவுமகாவிஷ்ணுவை, சைதாப்பேட்டை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்#Mahavishnu |… pic.twitter.com/r0IRltOdPj

— Thanthi TV (@ThanthiTV) September 11, 2024
Read Entire Article