ஸ்ரீவில்லிபுத்தூர்: மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோயிலில் 96வயது மூதாட்டி கொதிக்கும் நெய்யில் கையை விட்டு விடிய, விடிய அப்பம் சுட்டார். மூதாட்டி சுட்ட அப்பம் அம்மனுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் பத்திரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் ஊரணிப்பட்டி தெருவைச் சேர்ந்த முத்தம்மாள் (96), கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடுவது வழக்கம்.
இதன்படி, மகா சிவராத்திரியையொட்டி நேற்றிரவு கோயிலில் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் முன் வைக்கப்பட்டிருந்த சட்டியில் அதிகளவு நெய் ஊற்றப்பட்டு இரவு 11 மணிக்கு அப்பம் சுடும் நிகழ்ச்சி தொடங்கியது. கொதிக்கும் நெய்யில் மூதாட்டி முத்தம்மாள் வெறும் கையால் அப்பம் சுட்டார். இன்று அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து 5 மணி வரை அப்பம் சுட்டார். அப்போது கூடியிருந்த பெண்கள் பக்தி பாடல்களை பாடியும், குலவையிட்டும் மூதாட்டியை உற்சாகப்படுத்தினர். மூதாட்டி சுட்ட அப்பம் அம்மனுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக அப்பம் வழங்கப்பட்டது.
The post மகா சிவராத்திரியையொட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் விடிய விடிய அப்பம் சுட்ட மூதாட்டி appeared first on Dinakaran.