மகளிர் டி 20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!

3 days ago 4

துபாய்: மகளிர் டி 20 உலகக் கோப்பை தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் 4ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்த ஆண்டு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது. போட்டியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பதாவது பதிப்பு பங்களாதேஷில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்ட பிறகு, ஐசிசி துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் போட்டிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது..

குழு A இல் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் உள்ளன. குரூப் Bயில் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுடன் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் அபுதாபியில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியின் மூலம் இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் போட்டிக்குத் தகுதி பெற்றன.

போட்டியில் ஒவ்வொரு அணியும் நான்கு குரூப் போட்டிகளில் விளையாடும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அக்டோபர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் நடைபெறும் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும். அக்டோபர் 20 ஆம் தேதி துபாயில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள இரண்டு மைதானங்களில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டிக்கு முன்னதாக செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 1 வரை 10 பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும்.

The post மகளிர் டி 20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி! appeared first on Dinakaran.

Read Entire Article