மஸ்கட்,
9-வது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - சீனா அணிகள் மோதின . இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய சீன அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது
நடப்பு தொடரில் இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.இந்திய அணி கடைசி லீக்கில் இன்று தாய்லாந்துடன் மோதுகிறது. அரையிறுதி வாய்ப்பை பெற இதில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.