பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு 3 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்

6 days ago 4

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக வரும் ஜனவரி 11ம் தேதி பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட்டுகள், முன்பதிவு தொடங்கிய 3 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜன.10ம் தேதி ரயிலில் செல்வதற்கான முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. அதேபோல் நேற்றைய தினமும், ஜன.11ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கின. 5 நிமிடங்களிலேயே டிக்கெட் விற்பனை முடிந்தது. முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்குவதால் பயணிகள் ரயில் நிலையங்களில் காலை 6 மணி முதலே வந்து காத்திருந்தனர்.

காத்திருந்த அனைவருக்கும் டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. பெரும்பாலானோர் ஏமாற்றம் அடைந்தனர். எனவே முன்பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து தரும்படியும், கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்காக கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்களை அமைக்க வேண்டும் எனவும் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதுபோல, எந்தவொரு ஏற்பாட்டையும் இதுவரை தெற்கு ரயில்வே நிர்வாகம் செய்யவில்லை என பயணிகள் வேதனையுடன் குறிப்பிட்டனர். மேலும், ஜன.12ம் தேதி பயணம் மேற்கொள்ள இன்றும், ஜன.13ம் தேதி பயணம் மேற்கொள்ள நாளையும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு 3 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள் appeared first on Dinakaran.

Read Entire Article