பெரும்பாக்கம் அரசு கலை கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை

4 days ago 5

தாம்பரம்: பெரும்பாக்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் நேரடியாக வந்து சேரலாம் என அக்கல்லூரியின் முதல்வர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ தமிழ் பி.ஏ ஆங்கில இலக்கியம், பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்.சி கணிதம், பி.சி.ஏ, பி.எஸ்.சி வேதியியல், பி.எஸ்.சி இயற்பியல், பி.காம், பி.ஏ கார்பரேட் செக்ரட்டரிஷிப் ஆகிய இளங்கலை படிப்புகளில் காலியிடங்கள் உள்ளன.

இக்காலியிடங்களை நிரப்புவதற்கு தற்போது நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி கூறுகையில், ‘இளங்கலை பட்டப்படிப்புகளில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் தேவையான சான்றிதழ்களுடன் நேரில் வந்து சேர்க்கையில் கலந்துகொள்ளலாம். பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ.1000ம், மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000ம் பெறலாம். எனவே, மாணவ, மா்ணவிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,’ என்றார்.

The post பெரும்பாக்கம் அரசு கலை கல்லூரியில் நேரடி மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Read Entire Article