பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு கால விடுமுறை-கர்நாடக அரசு திட்டம்

2 hours ago 2

பெங்களூரு,

கர்நாடக தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் லாட் பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெண்கள் நலம் சார்ந்து கர்நாடக அரசு புதிய கொள்கையை வகுத்துள்ளது. இதற்காக 18 பேர் குழு தனது அறிக்கையை வழங்கியுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 6 நாட்கள் மாதவிலக்கு கால விடுமுறை வழங்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் இதனை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து பொதுமக்கள், தொழில் நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனைக்கு பிறகு அதன் அடிப்படையில் சட்டம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நாட்டில் தற்போது பீகார், கேரளா, ஒடிசாவில் மட்டுமே பெண் ஊழியர்களுக்கு இதுபோன்ற விடுமுறை அமலில் உள்ளது. கேரளாவில் பெண் ஊழியர்கள் மட்டுமின்றி 18 வயது நிரம்பிய மாணவிகளுக்கும் இந்த விடுமுறை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article