பெஞ்சல் புயல் எதிரொலி: பெங்களூருவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

2 hours ago 2

பெங்களூரு,

வங்கக் கடலில் பெஞ்சல் புயல் உருவாகி இருக்கிறது. இது இன்று (சனிக்கிழமை) பிற்பகலில் சென்னை அருகே கரையை கடக்கிறது. இதையொட்டி வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் அந்த புயல் தாக்கத்தால் கர்நாடகத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூரு உள்ளிட்ட தென் கர்நாடக மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று பெங்களூருவில் உள்ள வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பெங்களூரு, கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர், ராமநகரில் கனமழை பெய்யும் என்றும், துமகூரு, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) சாம்ராஜ்நகர், கோலார், சிக்பள்ளாப்பூர், ராமநகரில் கனமழை பெய்யும் என்றும், மண்டியா, ஹாசன், துமகூரு, மைசூரு, சித்ரதுர்கா, குடகு மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Read Entire Article