பூக்கள் விலை வீழ்ச்சி

6 days ago 4

ஓசூர், செப்.14: ஓசூர் பஸ்நிலையம் எதிரில் உள்ள மலர் சந்தைக்கு திருவண்ணாமலை, வேலூர், மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, அஞ்செட்டி, சூளகிரி, பாகலூர், பேரிகை, ராயக்கோட்டை, தளி, அத்திப்பள்ளி, சந்தாபுரம், ஆனேக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கேரள மாநிலம் மூணாறில் நடந்த நிலச்சரிவு காரணமாக, கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் களையிழந்துள்ளது. இதனால் ேகரளாவிற்கு ஆர்டர் இல்லாததால், பூக்கள் அனுப்பப்படவில்லை. இதனால், ஓசூர் மலர் சந்தையில் கனகாம்பரம் மட்டும் கிலோ ₹500க்கு விற்பனையானது. சாமந்தி ₹100, பட்டன்ரோஸ் ₹100, ஊசிமல்லி ₹460, பன்னீர் ரோஸ் ₹100, வெள்ளை ரோஸ் ₹100, செண்டுமல்லி, ஜாதிமல்லி ₹100, செண்டுமல்லி ₹10, சம்பங்கி ₹20 உள்ளிட்ட பூக்களின் விலை குறைந்துள்ளது. வரத்து அதிகரித்ததாலும், கேரளாவில் ஓணம் பண்டிகை களையிழந்ததாலும் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

The post பூக்கள் விலை வீழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article