பிரிஸ்பேன் ஆடுகளம் எப்படி இருக்கும் ? பிட்ச் பராமரிப்பாளர் தகவல்

4 hours ago 1

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியா -  இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் 2வது போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது.அதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியா அடுத்த 3 போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி வரும் 14-ம் தேதி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், பிரிஸ்பேன் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பது குறித்து பிட்ச் பராமரிப்பாளர் டேவிட் சந்துர்ஸ்கி கூறுகையில்,

'ஒவ்வொரு முறையும் இந்த ஆடுகளத்தை நல்ல வேகத்துடன், பவுன்ஸ் இருக்கும் வகையிலேயே தயாரிக்கிறோம். பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் இரு தரப்புக்கும் சரிசம அளவில் ஆடுகளம் ஒத்துழைக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். எல்லாவற்றுக்கும் ஏற்றது போல் இருக்கும் என நம்புகிறேன். கடந்த இரு நாட்கள் இங்கு மழை பெய்துள்ளது. ஆனால் போட்டிக்கு 3 நாட்கள் இருப்பதால் அதற்குள் ஆடுகளத்தை சரியான முறையில் தயார் செய்து விடுவோம் ' என்றார்.

Read Entire Article