பாலத்தில் கார் மோதி 3 பேர் பரிதாப பலி

3 months ago 11

ராமநாதபுரம்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வி.வடமலைபாளையம், கருடாமுத்தூரை சேர்ந்தவர்கள் சண்முகசுந்தரம்(45), தீபக்அரவிந்த்(26), நாகராஜ்(36) மற்றும் கார்த்திகேயன். உறவினர்களான 4 பேரும் விழாவிற்கு தீர்த்தம் எடுத்துச் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு பல்லடத்தில் இருந்து ராமேஸ்வரம் வந்துள்ளனர். நேற்று அதிகாலை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் மற்றும் கோயிலில் உள்ள தீர்த்தக் கிணறுகளில் புனித தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பல்லடம் செல்வதற்காக காரில் புறப்பட்டுச் சென்றனர். காரை தீபக்அரவிந்த் ஓட்டியதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் அருகே களத்தாவூர் என்ற இடத்தில் சென்றபோது, சாலையோரம் இருந்த பாலத்தில் கார் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் சண்முகசுந்தரம் சம்பவ இடத்திலேயும், மருத்துவமனையில் தீபக்அரவிந்த், நாகராஜ் ஆகியோரும் உயிரிழந்தனர். கார்த்திகேயன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

The post பாலத்தில் கார் மோதி 3 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Read Entire Article