பாக்ஸ் ஆபிஸில் மோதிக்கொண்ட ஒரே இயக்குனரின் 2 படங்கள்

6 days ago 7

மும்பை,

இந்தியாவில் பல இயக்குனர்கள் ஒரு வருடத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படங்களை வெளியிட்டிருக்கின்றனர். ஆனால், அதில் வெகுசிலரே, தான் இயக்கிய 2 படங்களை ஒரே சமயத்தில் வெளியிட்டிருக்கின்றனர். அந்த இயக்குனர்களில் ஒருவர்தான் பிரியதர்ஷன்.

இவர் இந்தி மற்றும் மலையாளத்தில் பல ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். இவரது இயக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2 படங்கள் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் மோதிக்கொண்டன. அதில் ஒன்று, அக்சய் குமார் மற்றும் ஜான் ஆபிரகாம் நடித்த 'கரம் மசாலா'. இது பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1985-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான போயிங் போயிங்கின் படத்தின் ரீமேக்காகும்.

அதனைத்தொடர்ந்து, சல்மான் கான், கரீனா கபூர் மற்றும் ஜாக்கி ஷெராப் நடிப்பில் 2005 -ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி வெளியான படம் கியோன் கி. இப்படத்தையும் பிரியதர்ஷன்தான் இயக்கி இருந்தார். இந்த படம் அவரது இயக்கத்தில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான தாளவட்டத்தின் ரீமேக் ஆகும்.

இந்த இரண்டு படங்களில் ரூ.17 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கரம் மசாலா, உலகளவில் ரூ.64 கோடி வசூலித்து, அந்த ஆண்டின் நான்காவது அதிக வசூல் செய்த இந்தியப் படமாக அமைந்தது. மறுபுறம், கியோன் கி, ரூ.21 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.23 கோடி மட்டுமே வசூலித்தது.

Read Entire Article