பள்ளிக்கரணை போக்குவரத்து சரகத்தில் சாலை விதிகளை மதிக்காமல் சென்ற 350 வாகனங்கள் மீது வழக்கு பதிவு

1 week ago 6

துரைப்பாக்கம்: சென்னை ராஜிவ் காந்தி சாலையில் மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. இதனால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் தவறான பாதையில் செல்வதால் விபத்து ஏற்படுகிறது. இதையடுத்து இன்று காலை பல இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் பள்ளிக்கரணை போக்குவரத்து உதவி ஆணையாளர் சுந்தர்ராஜ் தலைமையில் காரப்பாக்கம் ராஜிவ் காந்தி சாலையில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சாலை விதிகளை மதிக்காமல் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். இதுபோன்ற தவறுகளை மறுபடியும் செய்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘பள்ளிக்கரணை சரகத்தில் மட்டும் சாலை விதிகளை மதிக்காமல் சென்ற வாகனங்கள் மீது 350 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜிவ் காந்தி சாலையில் மட்டும் 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

 

The post பள்ளிக்கரணை போக்குவரத்து சரகத்தில் சாலை விதிகளை மதிக்காமல் சென்ற 350 வாகனங்கள் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article