சென்னை: பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் ஏற்படும் சாதி தொடர்பான வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க ஓய்வு நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து, பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை அகற்ற பரிந்துரைகளை பெற்றது. அவ்வாறு இருக்கும் போது, பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிப்பதில் என்ன தயக்கம்?” எனக்கூறிய நீதிபதி பரத சக்ரவர்த்தி ஒருவார கால அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவு appeared first on Dinakaran.