பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார்

2 hours ago 4

கோவை,

கோவை, தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 109. விவசாயத்தில் பாப்பம்மாளின் பங்களிப்பை பாராட்டி கடந்த 2021-ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. கடந்த 2021-ல் கோவை வந்த பிரதமர் மோடி, பாப்பம்மாளை சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் பாப்பம்மாள் காலமானார். தி.மு.க. பவள விழாவை முன்னிட்டு பாப்பம்மாளுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

#BREAKING || பத்மஸ்ரீ பாப்பம்மாள்(109) காலமானார்கடந்த 2021ம் ஆண்டு, கோவையை சேர்ந்த பாப்பம்மாளுக்கு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்ததுகடந்த 2021ல் கோவை வந்திருந்த பிரதமர் மோடி, பாப்பம்மாளை சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது#ThanthiTV | #Pappammal | #Kovai pic.twitter.com/VYKf7byb8j

— Thanthi TV (@ThanthiTV) September 27, 2024
Read Entire Article