நெல்லையில் சோலார் பேனல் தொழிற்சாலை: சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்; 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு

2 hours ago 2

சென்னை: இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விக்ரம் மின்உற்பத்தி நிறுவனம் விளங்கி வருகிறது. அந்தவகையில் நெல்லை மாவட்டம், கங்கை கொண்டான் சிப்காட்டில் 146 ஏக்கரில் ரூ.1,260 கோடி முதலீட்டில் சோலார் பேனல் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஒன்றிய அரசிடம் விக்ரம் சோலார் நிறுவனம் விண்ணப்பித்தாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த தொழிற்சாலை மூலம் 3 ஜிகா வாட் சோலார் மற்றும் பிவி சோலார் மாட்யூல் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளன.

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் அடுத்த 10 ஆண்டுகளில், சோலார் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தை எளிதாக அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, கங்கைகொண்டான் சிப்காட் தொழில் மைய வளாகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா சார்பில் டாடா டிபி சோலார் லிமிடெட் என்ற பெயரில் 313 ஏக்கர் நிலப்பரப்பில் சோலார் பேனல் மற்றும் மாட்யூல் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post நெல்லையில் சோலார் பேனல் தொழிற்சாலை: சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்; 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article