நெல் கொள்முதலுக்கு ஆன்லைனில் பதிவு

1 week ago 4

கடலூர் மாவட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆன்லைனில் பதிவு செய்து விற்பனை செய்யலாம் என அம்மாவட்ட கலெக்டர் சிபி செந்தில்குமார் அறிவுறுத்தி உள்ளார்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய ஏதுவாக சில வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கடந்த 1ம் தேதி முதல் 2024-2025ம் ஆண்டுக்கான கொள்முதல் பருவம் தொடங்கி உள்ள நிலையில், விவசாயிகளின் விளைநிலத்தின் பட்டா நகல், சிட்டா அடங்கல், ஆதார், வங்கி புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள கொள்முதல் நிலையங்களில் வழங்கி c-DPC மூலம் பதிவேற்றம் செய்து விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தொடர்புடைய கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்து கொள்ளலாம். கொள்முதல் நிலையத்தின் பெயர், கொள்முதல் செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி (OTP) மூலம் அனுப்பப்படும். விவசாயிகள் தங்களது அலைபேசி எண்ணிற்கு பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் உரிய காலத்தில் நெல்லினை விற்பனை செய்து பயன்பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் நிலையங்களில் முன்னுரிமை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் நிலையங்களில் அடங்கல் பட்டா பதிவு செய்வதற்கும் கட்டணம் ஏதும் இதற்கு செலுத்த வேண்டியதில்லை. மேலும், விற்பனை செய்வதற்கும் எந்தவித தொகையும் விவசாயிகள் வழங்க வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்களுக்கு 04142-230630 என்ற தொலைபேசி எண்ணையும், 94421 30630 (மண்டல மேலாளர்), 99426 62589, 9659997146 (துணை மேலாளர்) என்ற கைபேசி எண்களையும் தொடர்புகொள்ளலாம் எனவும் கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகக் கிராமப்புறங்களில் கால்நடைகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. கால்நடைகளுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் கால்நடை மருத்துவமனைகளுக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தொலைதூரக் கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 245 நடமாடும் கால்நடை மருத்துவ சேவை வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்காக 6 நடமாடும் கால்நடை மருத்துவ சேவை வாகனங்கள் (1962) தேசிய விலங்குகள் நோய்த்தடுப்பு திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் சேவைகளை கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கடந்த வாரம் தொடங்கி வைத்தார். இந்த வாகனங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவ சிகிச்சை பணிகள் மற்றும் கருவூட்டல் பணிகளை மேற்கொள்ளும். பிற்பகலில் கால்சென்டர் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சைப் பணிகளையும் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல் ரகம் அடிப்படை ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.
சன்ன ரகம் 2,320.00
பொது ரகம் 2.300.00

நெல் ரகம் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.
சன்ன ரகம் 130.00
பொது ரகம் 105.00

நெல் ரகம் மொத்தம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.
சன்ன ரகம் 2450.00
பொது ரகம் 2405.00

The post நெல் கொள்முதலுக்கு ஆன்லைனில் பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article