உதகை: மத்திய, மாநில அரசுகள் நிலமற்ற பழங்குடியினருக்கு நிலம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தினார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நான்கு நாட்கள் பயணமாக கடந்த 27-ம் தேதி நீலகிரி மாவட்டம் வந்தார். உதகை ராஜ்பவனில் தங்கியுள்ள அவர் வியாழக்கிழமை வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.