நாளை மறுநாள் பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்?

1 day ago 4

சென்னை,

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 27-ந்தேதி அமெரிக்கா சென்றார். அங்கு சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ நகர்களில் சுற்றுப்பயணம் செய்து 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். 17 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 14-ந்தேதி அவர் சென்னை திரும்பினார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "மெட்ரோ ரெயில் நிதி, பள்ளிக்கல்வித்துறை நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்" என்று கூறினார்.

இந்த நிலையில் நாளை மறுநாள் பிரதமர் மோடியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி தரப்பில் இருந்து இதுவரை நேரம் வழங்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

நேரம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் நாளை மறுநாள் (செப். 20) பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, சமக்ர சிக்ஷா அபியான் திட்ட நிதி, மெட்ரோ ரெயில் திட்ட நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார்.

#BREAKING || வரும் 20ம் தேதி பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தகவல்

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்

பிரதமர் மோடி தரப்பில் இருந்து இதுவரை நேரம் வழங்கப்படவில்லை

நேரம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் வரும் 20ம் தேதி பிரதமர்… pic.twitter.com/lFpi8pi3Ig

— Thanthi TV (@ThanthiTV) September 18, 2024


Read Entire Article