தொழிலாளர் நலத்துறை சார்பில் மாதவரத்தில் 14ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

2 months ago 10

திருவொற்றியூர்: தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 14ம் தேதி, மாதவரம் பொன்னியம்மன்மேடு, ஜிஎன்டி சாலையில் உள்ள புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் குறிஞ்சி கணேசன் தலைமை வகித்தார்.

மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ கலந்துகொண்டு, தொழில் துறையில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல் ஆகியோர் செய்து வரும் பல்வேறு திட்டங்களை விளக்கி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் தீவிரமாக பணியாற்றி முகாம் வெற்றியடைய முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சென்னை மண்டல இணை இயக்குனர் தேவேந்திரன் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு முகாமில் எத்தனை நிறுவனங்கள் பங்கேற்கின்றன என்றும், வேலைவாய்ப்பு பெறுவதில் வழிகாட்டு முறைகள், ஏற்பாடுகள் குறித்தும் விளக்கினார். கூட்டத்தில் திமுக மாவட்ட, பகுதி, வார்டு நிர்வாகிகள், அமைப்பாளர்கள், மகளிரணி, மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் துணை இயக்குனர் மகேஸ்வரி, அலுவலர் சண்முகவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post தொழிலாளர் நலத்துறை சார்பில் மாதவரத்தில் 14ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article