தேயிலை விவசாயிகள் மீது முதல்வர் தனி கவனம் செலுத்தி வருகிறார்

1 week ago 8

*சுற்றுலாத்துறை அமைச்சர் பேச்சு

ஊட்டி : குன்னூர் உபாசி கலையரங்கில் நீலகிரி மாவட்ட தோட்ட அதிபர்கள் சங்கங்களின் 133வது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் கார்த்திக் நாராயண ஜெயராமன் தலைமை வகித்தார். செயலாளர் ஜேக்கப் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை பல்வேறு வளர்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சரின் கீழ் இயங்கும் அனைத்து துறைகளும், நமது நாட்டிலே முதலிடத்தில் உள்ளது.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தேயிலை ஏற்றுமதி செய்ய பல்வேறு பணிகளை செய்து வருவதோடு, அதற்கான ஒத்துழைப்பு கொடுத்து, ஊக்குவித்து வருகின்றோம். ஆர்த்தோடெக்ஸ் தேயிலைக்கு என்று சிறப்பு வாய்ந்த தனி இடம் உண்டு. பல்வேறு நாடுகளுக்கு, இங்கிருந்து தேயிலைத்தூள் ஏற்றுமதி செய்ய தமிழக அரசு பல்வேறு வளர்ச்சி பணிகளையும் ஆதரவு தந்து வருகிறது.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தேயிலை பற்றி அறிவதற்கு இங்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் தேயிலை விவசாயிகளின் மீது தனி கவனம் செலுத்தி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில், சங்கத்தின் துணை தலைவர் பாஞ்சாலி, தென்னிந்திய தோட்ட அதிபர்களின் சங்கத்தின் தலைவர் சௌந்தரராஜன் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த தேயிலை தோட்ட அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post தேயிலை விவசாயிகள் மீது முதல்வர் தனி கவனம் செலுத்தி வருகிறார் appeared first on Dinakaran.

Read Entire Article