தெலுங்கானா வெள்ள பாதிப்பு: ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ரூ1 கோடி நன்கொடை

1 week ago 9

ஐதராபாத்,

தெலுங்கானாவில் ஒரு வாரத்திற்கு முன்பு திடீர் கனமழை கொட்டியது. தொடர்ந்து பெய்த மழையால், முக்கிய சாலைகளை வெள்ளம் மூழ்கடித்தது. நூற்றூக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானாவுக்கு பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியை, ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் இன்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தெலுங்கானா வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளுக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு பவன் கல்யாண் வழங்கினார்.

முன்னதாக, ஆந்திர மாநிலத்திற்கும் பவன் கல்யாண் தலா ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கியிருந்தார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 400 கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என பவன் கல்யாண் அறிவித்திருந்தார். மேலும் பணம் உரிய முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.

பவன் கல்யாண் - ரேவந்த் ரெட்டி சந்திப்பின்போது இரு மாநிலங்களுக்கு இடையேயான உறவுகள் மற்றும் பிற விஷயங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாணும், தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியும் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article