தூத்துக்குடி கல்லூரியில் விளையாட்டு விழா

1 day ago 3

தூத்துக்குடி, செப். 19: தூத்துக்குடி செயின்ட் ஆன்ஸ் நர்சிங் கல்லூரியில் 8ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மகிழ்ஜான் சந்தோஷ், விழாவை துவக்கிவைத்து பேசினார். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழாவிற்கு செயின்ட் ஆன்ஸ் சபையின் தலைமை நிர்வாகி ஜினு அகஸ்டின் தலைமை வகித்தார். திரு இருதய மருத்துவமனையின் துணை நிர்வாகி பவுலின் செபாஸ்டின் முன்னிலை வகித்தார். பேராசிரியை ஆக்னஸ் வரவேற்றார். ஆசிரியை கார்த்திகா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆனீஸ் குரியன், கல்லூரி துணை முதல்வர் ஷர்மிளா ஜோன்ஸ் மற்றும் அனைத்து பேராசிரியைகள், ஆசிரியைகள் செய்திருந்தனர்.

The post தூத்துக்குடி கல்லூரியில் விளையாட்டு விழா appeared first on Dinakaran.

Read Entire Article