கிருஷ்ணகிரி, பிப். 8: காவேரிப்படடணம் அருகே குண்டலப்பட்டி கிராமத்தில் சக்தி விநாயகர், சர்வேஸ்வரர். மாரியம்மன், காளியம்மன் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா, நாளை (9ம் தேதி) நடைபெறுகிறது. விழாவையொட்டி, கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதல், முளையிடுதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. இந்நிலையில் நேற்று கணபதி பூஜை, கங்க பூஜையுடன் தீர்த்தம் கொண்டு வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்றனர். தொடர்ந்து மாலை வாஸ்து சாந்தி, பிரவேசபலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post தீர்த்தக்குட ஊர்வலம் appeared first on Dinakaran.