தீ பிடித்து எரிந்த தனியார் பள்ளி பேருந்து

4 hours ago 2

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழவேலி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட் வேல்டு பள்ளி செயல்பட்டு வருகிறது. எல்கேஜி முதல் 12ம் வகுப்புகள் வரை நடைபெறும் இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு மாணவ, மாணவிகள் செல்வதற்கு அரசு மற்றும் தனியார் பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோ வசதி இல்லாததால் பெரும்பாலான பெற்றோர் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து செல்கின்றனர். மீதமுள்ள மாணவ, மாணவிகள் பள்ளி பேருந்தில்தான் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

இதில், 15க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வருகின்றன.இந்நிலையில், நேற்று‌ மாலை எப்போதும்போல பள்ளி முடிந்ததும் மாணவ, மாணவிகளை வீட்டுக்கு அழைத்து சென்று அனைத்து மாணவர்களையும் வீட்டில் இறக்கிவிட்டு மீண்டும் பள்ளிக்கு வரும்போது பேருந்தில் இஞ்சின் பகுதியில் மின்கசிவு ஏற்பட்டு புகை வருவதை உணர்ந்த டிரைவர் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு மெக்கானிக்கை அழைத்து வருவதற்குள் தீப்பிடித்து எரிந்தது.தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் மளமளவென தீப்பரவி பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது.

இதில், மாணவர்களை பத்திரமாக வீட்டில் இறக்கிவிட்டபிறகு தீப்பிடித்ததால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டு தோறும் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக பரிசோதனை செய்து பேருந்துக்கான அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அப்படியிருந்தும் இந்தபள்ளி பேருந்து எரிந்த சம்பவம் பெற்றோர் தரப்பில் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தீ பிடித்து எரிந்த தனியார் பள்ளி பேருந்து appeared first on Dinakaran.

Read Entire Article