திருமலையில் சித்திரை மாத பவுர்ணமி: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா

16 hours ago 2

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமியன்று இரவில் தங்க கருடவாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி மற்ற நாட்களை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்படி சித்திரை மாத பவுர்ணமியையொட்டி நேற்றிரவு தங்க கருட வாகனத்தில் மலையப்பசுவாமி கோயிலில் உள்ள வாகன மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நான்கு மாடவீதியில் பவனி நடைபெற்றது. அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டனர்.

ரூ.3.90 கோடி காணிக்கை;
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 68,760 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 27,544 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல்களில் ரூ.3.90 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 10 அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் நேரடியாக சுவாமி தரிசனம் செய்தனர்.

The post திருமலையில் சித்திரை மாத பவுர்ணமி: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா appeared first on Dinakaran.

Read Entire Article