திருப்பதியில் மகா பாவம் செய்து விட்டார்கள் - முன்னாள் தலைமை அர்ச்சகர்

3 hours ago 2

சென்னை,

திருப்பதி எழுமலையான் கோவில் லட்டு விவகாரம் குறித்து முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமணத்தீட்சதலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திருப்பதியில் பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பசு நெய்யில் அதிக கலப்படம் இருந்தது மற்றும் தரம் குறைவாக இருந்ததை நான் பல வருடங்களுக்கு முன்பே கவனித்தேன். இது தொடர்பான புகாரைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கோவில் அறக்கட்டளையின் தலைவர் முன்வைத்தேன். ஆனால் அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை.

இப்போது, புதிய அரசாங்கம் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த அரசு அனைத்து குழப்பங்களையும் நீக்குவதாக உறுதியளித்துள்ளது. ஏற்கனவே அரசு பால் பண்ணைகளில் இருந்து சுத்தமான பசு நெய்யை வாங்கி வந்த அவர்கள், தற்போது சுத்தமான நெய்யில் உணவுப் பொருட்களைத் தயாரித்து வருகின்றனர்.

திருப்பதியில் கடந்த 5 ஆண்டுகளாக லட்டில் விலங்கு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்து மகா பாவம் செய்துவிட்டார்கள். எனவே கோடிக்கணக்கான பக்தர்கள் அதீத நம்பிக்கையும் பக்தியும் கொண்டுள்ள புண்ணியக் கோவிலில் இது போன்ற மகா பாவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆகம சாஸ்திரத்தில் இருப்பதுபோல திருப்பதியில் வழிபாடு நடத்தப்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article