திருப்பதி லட்டு பிரசாத விவகாரம்; தவறு செய்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை - சரத்குமார் வலியுறுத்தல்

2 hours ago 4

சென்னை,

நடிகர் சரத்குமார் நேற்று வௌியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆந்திர மாநிலத்தில் உள்ள உலக பிரசித்திப் பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பக்தர்கள் பக்தியுடன் சாமிதரிசனம் செய்வர். அங்கு பக்தர்கள் வாங்கி உண்ணும் திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கொண்டு தயாரிக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கால்நடை மற்றும் உணவு நிறுவனம் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, பக்தர்களுக்கு பேரதிர்ச்சியளிக்கிறது.

தெய்வத்திற்கு தயாராகும் பிரசாதத்தில், இத்தகைய குளறுபடிகள் நடந்திருப்பது ஏற்புடையதல்ல. புனித தலங்கள், கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் மிகுந்த அக்கறையோடும், கவனத்தோடும் தயாரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு குந்தகம் விளைவித்த செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி உடனடியாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article