திருப்பதி லட்டில் கலப்பட நெய் விவகாரம் ஏஆர் டெய்ரி புட் நிறுவனத்தில் ஆந்திர அதிகாரிகள் சோதனை: 6 மணி நேரத்துக்குமேல் விசாரணை

2 hours ago 1

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பிள்ளையார்நத்தத்தில் உள்ள ஏ.ஆர். டெய்ரி புட் நிறுவனம் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு தயாரிப்பதற்காக கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் அனுப்பப்பட்ட நெய்யில் மாட்டின் கொழுப்புகள் கலந்திருப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து நெய்யை குஜராத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தில் வைத்து ஆய்வு மேற்கொண்டதில் மாட்டின் கொழுப்புகள் கலந்திருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து லட்டு செய்வதற்காக நெய் ஒப்பந்தம் செய்த திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனம் அனுப்பிய நெய்யில் கலப்படம் இருப்பதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் நேற்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், நீதிமன்றம் சார்பில் அமைக்கப்பட்ட ஒன்றிய அரசு அதிகாரிகள் குழுவினர் 11 பேர், போலீசாருடன் 3 கார்களில் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திற்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். முக்கிய ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை முதலில் ஆய்வு செய்தனர். பின்னர் பால், நெய் உள்பட பல்வேறு உணவுப்பொருட்களின் தரம் குறித்து சோதனை செய்தனர். பகல் 1 மணிக்கு வந்த அதிகாரிகள் இரவு 7 மணி வரை சுமார் 6 மணி நேரம் சோதனை நடத்தி ஊழியர்களிடம் விசாரித்தனர். பின்னர் வெளியே சென்ற அதிகாரிகள், இரவு 9 மணியளவில் மீண்டும் நிறுவனத்துக்கு சென்று விசாரணையை தொடர்ந்தனர்.

The post திருப்பதி லட்டில் கலப்பட நெய் விவகாரம் ஏஆர் டெய்ரி புட் நிறுவனத்தில் ஆந்திர அதிகாரிகள் சோதனை: 6 மணி நேரத்துக்குமேல் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article