திருச்சியில் முதல் முறையாக 10ஆயிரம் சதுர அடியில் “ப்ரி காஸ்ட்’’ முறையில் பள்ளி கட்டிடம்:  நில அதிர்வின்போது பாதிப்பு இருக்காது

1 week ago 11

திருச்சி: திருச்சியில் முதல் முறையாக 10ஆயிரம் சதுர அடியில் “ப்ரி காஸ்ட்’’ முறையில் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. செலவுகள் குறைவு, ஆயுட்காலம் அதிகம், நில அதிர்வின்போது பாதிப்பு இருக்காது என நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

கட்டுமான துறைகளில் பல்வேறு புதிய தொழில் நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. செங்கல், கருங்கல் வைத்து செம்மண் கலவையால் கட்டப்பட்ட காலம் மாறி, சிமெண்ட், செங்கல், மணல், கம்பி என்று கட்டுமானம் வளர்ந்தது. ஆனால் இன்னும் ஒருபடி மேலே சென்று கண்டெய்னரில் வீடுகளை வடிவமைக்கும் காலத்திற்கு நாம் இன்று வந்துவிட்டோம். அதேபோல் ஒரு கட்டிங்களை கட்டுவதற்கு வருட கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை மாறி இன்று ஒரு மாதத்தில் ஆரம்பித்து ஒரு பெரிய ஷாப்பிங் மால்களை 3 முதல் 6 மாதத்திற்குள் கட்டி முடிக்கும் அளவிற்கு கட்டுமான முறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

திருச்சியில் முதல் முறையாக ஒரு பள்ளிக் கட்டிடம் “ப்ரி காஸ்ட்’’ என்று சொல்லப்படும் கட்டுமான முறையை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. திருச்சி ராம்ஜிநகர், பஞ்சுமில் பேருந்து நிறுத்தத்தில் 8ம் வகுப்பு வரை செயல்படும் உமா மகேஸ்வரி என்ற அரசு உதவிபெறும் பள்ளியை டீம்மேஜ் என்ற தனியார் கட்டுமான நிறுவனம் “ப்ரி காஸ்ட்’’ என்ற புதிய முறையை பயன்படுத்தி கட்டியுள்ளது. இந்த பள்ளி வளாகம் மொத்தம் 10ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் கூறுகையில், ‘‘இந்த கட்டுமான முறையை பயன்படுத்தி 10 ஆயிரம் சதுர அடியில் தரை தளத்தில் 6 வகுப்பறைகள், முதல் தளத்தில் 2 வகுப்பறைகள் மற்றும் திறந்தவௌி பகுதிகள், வராண்டா, 12அடி அகலமுள்ள படிகட்டுகள், கழிவறைகள், ெரடிமேடு செப்டிக் டேங்குகள் என்று 15 முதல் 20 நாட்களில் இந்த பள்ளி முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் அனைத்துமே தனித்தனி பாகங்களாக தயாரிக்கப்பட்டு, கிரேன் உதவியுடன் தூக்கி வைத்து கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.

இந்த கட்டிடத்தை பொறுத்தவரை தண்ணீர் கசிவுகள் இருக்காது, எளிதில் தீப்பிடிக்காது, சத்தம் வௌியே கேட்காது, குறிப்பாக இந்த கட்டுமானம் நில அதிர்வுகளில் இருந்து மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டது. அதேபோல் இந்த கட்டுமானம் குறைபட்சம் 10 ஆயிரம் சதுர அடியாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும். அதிகபட்சமாக எத்தனை லட்சம் சதுரஅடியாக இருந்தாலும் 6 மாதத்தில் செய்து முடித்து விடலாம். அதேபோல் சதுரஅடி அதிகமாகும் போது கட்டுமான செலவு குறையும். கட்டுமான சதுரஅடி குறைந்தால் செலவு அதிகமாகும். சாதாரணமாக நாம் கட்டும் எந்த கட்டிடங்களாக இருந்தாலும் அதன் ஆயுட்காலம் 50 வருடங்கள், ஆனால் இந்த கட்டுமானம் 80 வருடங்கள் வரை ஆயுட்காலம் இருக்கும்.

திருச்சியை பொறுத்தவரை இதுதான் முதல் பள்ளி கட்டிடம் இந்த “ப்ரி காஸ்ட்’’ என்ற கட்டுமானமுறையை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுமானத்தில் திட்டமிடல் மற்றும் தேவை என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு, கட்ட முடியும். பாதியில் திட்டத்தை மாற்றியமைக்க முடியாது. ஏனென்றால் இது அனைத்தும் கட்டிடத்தின் அளவிற்கு ஏற்ப தனித்தனி ரெடிமேடு சுவர்கள் தயாரிக்கப்பட்டு கட்டிடம் எழுப்பப்படும். இந்த முறையில் எத்தனை அடுக்குகள் வேண்டுமானாலும் உயர்த்திக்கொள்ளலாம். ஆனால் அதை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும் என்றார்.
இந்த ரெடிமேட் சுவர்கள் கோவை மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள ஓலைப்பாளையம் என்ற கிராமத்தில் தயார் செய்யப்பட்டு, பின்னர் அந்த சுவர்களை நன்கு காயவைத்து டிரைலர் லாரியில் ஏற்றி பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகிறது.

இனிவரும் காலங்களில் இந்த புதிய முறையை பலரும் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post திருச்சியில் முதல் முறையாக 10ஆயிரம் சதுர அடியில் “ப்ரி காஸ்ட்’’ முறையில் பள்ளி கட்டிடம்:  நில அதிர்வின்போது பாதிப்பு இருக்காது appeared first on Dinakaran.

Read Entire Article