திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் தடுப்பணை கட்டுவது குறித்து ஆய்வு செய்யப்படும் : அமைச்சர் துரைமுருகன்

2 months ago 9

சென்னை : திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் தடுப்பணை கட்டுவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்த அவர், “சோமரசம்பேட்டை அருகே உய்யகொண்டான் வாய்க்காலில் தடுப்பணை கட்ட இயலாது, வேண்டுமென்றால் அந்த பகுதியில் உய்யகொண்டான் கால்வாய் சீரமைத்து தரப்படும். உய்யகொண்டான் கால்வாய் 69 கி. மீ தூரம் சொல்கிறது, வேளாண் பாசனத்திற்கான கால்வாய் இது. இதன் மூலம் தஞ்சை திருச்சியில் 40,000 ஏக்கர் நிலங்கள் 11 மாதங்கள் பாசன வசதி பெறுகிறது, “இவ்வாறு தெரிவித்தார்.

The post திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் தடுப்பணை கட்டுவது குறித்து ஆய்வு செய்யப்படும் : அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Read Entire Article