பாடாலூர், பிப்.27: சாத்தனூர் கல்மரப் பூங்காவில் நடைபெற்ற காடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் வனத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை மற்றும் காடு வளர்ப்பு மற்றும் காடுகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சூழல் உலா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சாத்தனூர் கல்மரப் பூங்காவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சிக்காக மாவட்டத்தில் 100 அரசு பள்ளிகளில் இருந்து மாணவ,மாணவிகள் சாத்தனூர் கல்மரப் பூங்காவிற்கு விழிப்புணர்வு பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். வனச்சரக அலுவலர் பழனிகுமரன் அனைவரையும் வரவேற்றார். அங்கு மாணவர்களுக்கு காடுகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விளக்கம ்அளிக்கப்பட்டது.
பின்னர், வனவியல் விரிவாக்க மையம், விளம்பர அலுவலர் சங்கரேஸ்வரி இயற்கை பாதுகாப்பு, மரக்கன்றுகள் வளர்ப்பதன் அவசியத்தையும், அதனால் சுற்றுசூழலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் கல்வி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முகமது உசேன், தனியார் தொண்டு நிறுவன மேலாளர்கள் செல்வகுமார், முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் சுற்றுச்சூழல், இயற்கையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
பின்னர் புவியியலாளர் பிரசாத் சாத்தனூர் கல்மர பூங்காவை பற்றியும் புதைபடிம பொருட்கள், அதன் தோற்றம் குறித்தும் அறிவியல் பூர்வமாக விரிவாக பேசினார். மற்றும் பெரம்பலூர் வனச்சரகர் சோமசுந்தரம், வேப்பந்தட்டை வனச்சரகர் சுதாகர், பெரம்பலூர் மாவட்ட பசுமை ஆர்வலர் கிருஷ்ணதேவராஜ், வனவர்கள், வனக்காப்பாளர்கள் அனைவரும் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விதமான போட்டிகளை நடத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வன அலுவலர் குகனேஷ் பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்னார். மேலும், பள்ளியின் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படன.
The post தினமும் மாலையில் படியுங்கள்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற காடுகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.