தாவரவியல் பூங்காவில் அலங்கார மாதிரிகள் அகற்றம்

1 week ago 6

 

ஊட்டி,செப்.13:தாவரவியல் பூங்கா புல் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த அலங்கார மாதிரிகள் அகற்றப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் மலர் கண்கட்சி நடந்தது. இந்த கண்காட்சிக்காக பூங்கா புல் மைதானத்தில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.பெர்ன் புல் மைதானத்தில் பிரம்மாண்ட டிஸ்னி வோல்ட் மாதிரியும்,ஊட்டி மலை ரயில் மாதிரியும் அமைக்கப்பட்டது.பல லட்சம் மலர்களைக் கொண்டு இந்த இரு மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டன.இந்த மலர் ஜூன் மாதம் வரை வைக்கப்பட்டிருந்தது.

ஜூன் மாதம் இறுதி வாரத்திற்கு மேல் அங்கு வைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்கள் அகற்றப்பட்டன. ஆனால்,மலர் கண்காட்சி முடிந்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், மலர் அலங்காரங்கள் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட பிரம்மண்ட இரும்புகளால் ஆன மாதிரிகள் அகற்றப்படாமல் இருந்தது. இது அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறாக இருந்தது. குறிப்பாக, பெரணி இல்லம் அருகே அமைக்கப்பட்டுள்ள மலை ரயிலில் மாதிரி அகற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில், இது தொடர்பான செய்தி கடந்த 10ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று இந்த இரும்பு கம்பிகளால் ஆன மாதிரிகள் அகற்றப்பட்டன.

The post தாவரவியல் பூங்காவில் அலங்கார மாதிரிகள் அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article