வேதாரண்யம். மே 12: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூர் திமுக சார்பில் திமுக ஆட்சியின் 5ம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு பொதுமக்கள் தாகம் தீர்க்கும் விதமாக நீர் மோர் பந்தல் அமைக்கபட்டது. தலைஞாயிறு பேரூர் திமுக மற்றும் சிறுபான்மையினர் அணியின் சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை தலைஞாயிறு பேரூர் திமுக செயலாளர் சுப்ரமணியன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர் தர்பூசணி வெள்ளரிப்பிஞ்சு மற்றும் இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜே ந்திரன், முன்னாள் கூட்டுறவு சங்க இயக்குனர் சுந்தர பிரபாகரன், நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வீரகுமார், வழக்கறிஞர் ஹைதரலி, நகர துணைச் செயலாளர் பால் முருகானந்தம் உள்ளிட்ட பேரூராட்சி, வார்டு உறுப்பினர்கள், பேரூர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post தலைஞாயிறு பேரூர் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.