தரமற்ற விதைகளை விற்றால் துறை ரீதியான நடவடிக்கை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2 hours ago 4

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விதைச்சான்றளிப்பு, உயிர்மச்சான்றளிப்புத் துறைக்கான ஆய்வுக்கூட்டம் சென்னையில் உள்ள வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் விதைச்சான்றளிப்பு, விதை ஆய்வு, விதைப்பரிசோதனை மற்றும் உயிர்மச்சான்றளிப்பு தொடர்பான திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். மேலும், விவசாயிகள் தரமான சான்றுபெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டுமென அறிவுரை வழங்கினார்.

மாவட்டங்களில் அதிகாரிகள் விதை அமலாக்கச் சட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தி, தரமற்ற விதைகள் விவசாயிகளுக்கு சென்றடைவதை தடுத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். விதைச்சட்டங்களின் அடிப்படையில் தரமற்ற விதைகளை வினியோகிக்கும் விற்பனையாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article