தமிழ்நாடு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியீடு

1 week ago 9

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியிட்டுள்ளது. 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி கடந்த ஜுன் மாதம் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிட்டது. வழக்கமாக ஓராண்டில் 210 நாட்கள் தான் வேலை நாட்களாக இருக்கும்.

ஆனால் புதிய கல்வியாண்டில் பல்வேறு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு மொத்த வேலை நாட்கள் 220ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேலை நாட்களை குறைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. பல தரப்பில் வந்த கோரிக்கையை ஏற்று, 210 வேலைநாட்கள் இருக்கும் வகையில் புதிய நாட்காட்டி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த 10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக இருக்கும் என பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாடு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article