
தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. அக்னி நட்சத்திரம் கடந்த 28-ம்தேதி முடிவடைந்த நிலையில் அதன்பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்து குறைவான வெப்ப நிலையே பதிவானது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 9 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடியில் 102.92 டிகிரி பாரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான இடங்கள் விவரம் வருமாறு:-
தூத்துக்குடி - 102.92 டிகிரி பாரன்ஹீட்
மதுரை விமான நிலையம் - 102.2 டிகிரி பாரன்ஹீட்
சென்னை மீனம்பாக்கம் - 101.84 டிகிரி பாரன்ஹீட்
மதுரை நகரம் - 101.12 டிகிரி பாரன்ஹீட்
பாளையங்கோட்டை - 100.58 டிகிரி பாரன்ஹீட்
அதிராமப்பட்டினம் - 100.58 டிகிரி பாரன்ஹீட்
சென்னை நுங்கம்பாக்கம் - 100.4 டிகிரி பாரன்ஹீட்
கரூர் பரமத்தி - 100.4 டிகிரி பாரன்ஹீட்
நாகப்பட்டினம் - 100.4 டிகிரி பாரன்ஹீட்