தமிழக அரசு துறைகளில் 105 அதிகாரிகள் :பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

1 day ago 2

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Manager/Assistant Manager/Account Officer/College Librarian/Veterinary Assistant/ Engineer உள்ளிட்ட 105 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Exam: Combined Technical Service Examination.
காலியிடங்கள் விவரம்: Manager-7, Deputy Manager-9, College Librarian-17, Accounts Officer-9, Officer (Finance)-6, Automobile Engineer-1, Veterinary Assistant Surgeon-31, Assistant Director (Tamil Development)-13, Assistant Manager-12.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்குரிய பொது கல்வித்தகுதி, தொழில்நுட்ப கல்வித்தகுதி பற்றிய விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.சம்பளம்: தமிழக அரசு விதிமுறைப்படி வழங்கப்படும்.

வயது: 01.07.2024 தேதியின்படி குறைந்த பட்சம் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர்கள் 32 வயதிற்குள்ளும், பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். இதர பிரிவினர்கள் எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/பிற்பட்டோர்/ மிகவும் பிற்பட்டோர்/ சீர்மரபினர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் தமிழ் மொழித் திறன் தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் பணிக்குரிய மெயின் எழுத்துத் தேர்வு ஆகிய தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

தமிழ் மொழி திறனாய்வு தேர்வு வருகிற நவம்பர் 18ம் தேதியும், மெயின் தேர்வு நவ.18ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும் நடைபெறும்.
எழுத்துத் தேர்வுக்கான விரிவான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
கட்டணம்: ரூ.200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் கிடையாது.www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.09.2024.

The post தமிழக அரசு துறைகளில் 105 அதிகாரிகள் :பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article