'தமிழக அமைச்சரவையில் மாற்றம்...' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 hours ago 4

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் நடைபெறும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கொளத்தூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்-அமைச்சர், "வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது" என்றார். அப்போது, "தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்குமா? உதயநிதிக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதா?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு "மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது" என மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

Read Entire Article