தந்தை பெரியார் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை

2 days ago 5

 

தஞ்சாவூர், செப். 18:தந்தை பெரியாரின் 146வது பிறந்த தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மோகன்ராஜ், தஞ்சாவூர் வட்டாரத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊடகப்பிரிவுத் தலைவர் பிரபு, மாநில பொதுக்குழு உறுப்பினர் கதர் வெங்கடேசன், பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post தந்தை பெரியார் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை appeared first on Dinakaran.

Read Entire Article