டைடல் பார்க் 6 மாதத்தில் திறக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு தலைவர் பேட்டி வேலூரில் ₹32 கோடியில் கட்டப்படும் வரும்

3 hours ago 3

வேலூர், செப்.20: வேலூரில் ₹32 கோடியில் கட்டப்படும் வரும் டைடல் பார்க் 6 மாதத்தில் திறக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு தலைவர் ஏ.பி.நந்தகுமார் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு தலைவரும், அணைக்கட்டு எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் தலைமையில், கலெக்டர் சுப்புலட்சுமி முன்னிலையில், குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன், கடம்பூர் ராஜி, சிந்தனை செல்வன், வேலு, ஜவாஹிருல்லா, சட்டமன்ற பேரவை முதன்மை செயலாளர் சீனிவாசன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு ஆகியோர் நேற்று காலை வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ஆய்வு ெசய்தனர். பின்னர், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. இதையடுத்து, சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு தலைவரும், அணைக்கட்டு எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் ஆய்வு செய்தோம். பொது நிறுவனங்கள் குழுவானது 2021ம் ஆண்டு 67 நிறுவனம் கொண்ட 93 ஆயிரம் கோடி இருந்தது. 22ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பிறகு ₹1 லட்சத்து 8 ஆயிரத்து 949 கோடியாக உயர்த்தியுள்ளது. இதில் 21ம் ஆண்டில் ₹5,207 கோடி கிராஸ் நஷ்டத்தை, 22ம் ஆண்டு ₹3,862 கோடியாக குறைந்துள்ளது.

ஆய்வின்போது, மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளை இந்த கூட்டத்தின் மூலம் ஆய்வு செய்துள்ளோம். எந்த எந்த திட்டங்கள் தொய்வாக உள்ளது. அந்த திட்டத்தை விரைவாக முடிப்பதற்கும், புதிய திட்டங்கள் கொண்டு வருவதற்கும் அந்தந்த துறையின் சார்பில் என்ன நன்மைகள் செய்ய முடியும் அதையும் செய்து தர வேண்டும் என அறிவுரை கூறியுள்ளோம். டைடல் பார்க் முதலில் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் தரை தளத்தோடு பணியை செய்யாததால் பலமுறை அறிவுறுத்தி முடிக்காத காரணத்தால், அந்த நிறுவனத்தை துறை ரீதியாக பிளாக் செய்து லிஸ்ட் செய்து ரீடன்டர் விட்டு வேகமாக பணிகள் நடைபெற்று வருகிறது. 6 மாத காலத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். நிறுவனங்கள் எல்லாம் புக் ஆகிவிட்டது. இதுதான் வேலூருக்கு பெருமை. வேலூர் மாவட்டத்தை படித்த சகோதரர்கள் மட்டுமே வேலைக்கு சேர வாய்ப்புள்ளது.

இன்றயை களஆய்வு நிறைவாக இருக்கிறது. பாலாற்றில் பாதாள சாக்கடை பைப்லைன் அமைப்பதற்கு பொதுப்பணித்துறை அனுமதி வழங்கியுள்ளது. பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கி 13 ஆண்டுகளாகி விட்டது விரைந்து முடிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம். அம்ரூத் பாதாள சாக்கடை திட்டமும் இணைந்து நடத்த வேண்டும் அப்போதுதான் முடியும். பாதாள சாக்கடை, அம்ரூத் திட்ட பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. குடியாத்தம் மருத்துவமனைக்கு செல்ல சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். வேலூர் புதிய பஸ் நிலையத்தில், கடைகளுக்கு வாடகை அதிகமாக இருப்பதால் யாரும் முன்வரவில்லை. புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாடகை அதிகமாக நிர்ணயம் செய்து இருப்பதால், அதை உடனடியாக குறைக்க முடியவில்லை. வாடகை தொடர்பாக அரசுக்கு மீண்டும், மீண்டும் சொல்லி வருகிறோம். குறைத்து கொடுக்கும்போது, கடைகள் ஏலம் விடப்படும். சொந்த மாவட்டம் என்பதால் குறை கூற மாட்டேன் என்கிறீர்களா? அப்படி எதுவுமில்லை பணிகள் சரியாக நடப்பதால் எதுவும் குறை கூறுவதற்கில்லை முதல்வர் செல்லும் வேகத்திற்கு பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினர்.

The post டைடல் பார்க் 6 மாதத்தில் திறக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு தலைவர் பேட்டி வேலூரில் ₹32 கோடியில் கட்டப்படும் வரும் appeared first on Dinakaran.

Read Entire Article