டி20 கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியின் வரலாற்று சாதனை பட்டியலில் இணைந்த டிராவிஸ் ஹெட்

1 week ago 9

சிட்னி,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 179 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 59 ரன்கள் குவித்தார். பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 151 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் இங்கிலாந்து அணியின் சாம் கரண் வீசிய ஆட்டத்தின் 5-வது ஓவரில் 30 ரன்கள் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா தரப்பில் ஒரு ஓவரில் அதிகபட்ச ரன்கள் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

அந்த பட்டியல்:-

ரிக்கி பாண்டிங் - 30 ரன்கள்

ஆரோன் பின்ச் & மேக்ஸ்வெல் - 30 ரன்கள்

கிறிஸ்டியன் - 30 ரன்கள்

மிட்செல் மார்ஷ் - 30 ரன்கள்

டிராவிஸ் ஹெட் - 30 ரன்கள்

Not a bad group of players to join Travis Head is in fine fettle More from #ENGvAUS https://t.co/sNox5CiNjc pic.twitter.com/uk4wE7kWM7

— ICC (@ICC) September 12, 2024
Read Entire Article